8. எறிபத்த நாயனார்

அமைவிடம் : temple icon.eripaththar
வரிசை எண் : 8
இறைவன்: பசுபதீஸ்வரர்
இறைவி : கிருபாநாயகி
தலமரம் : ?
தீர்த்தம் : அமராவதி
குலம் : ?
அவதாரத் தலம் : கரூர்
முக்தி தலம் : கரூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மாசி அஸ்தம்
வரலாறு : கருவூர் என்னும் தலத்தில் எறிபத்தர் திருஅவதாரம் செய்தார். சிவனடியார்களுக்குத் தீங்கு செய்யும் எவரையும் மழு என்னும் ஆயுதம் கொண்டு தண்டிப்பது இவரது வழக்கம். கருவூர் ஆலயத்தில் பூத்தொண்டு செய்து வந்தார் சிவகாமியாண்டார் என்னும் தொண்டர். ஒரு நாள் அவ்வாறு இறைவனுக்காக பூக்குடலையில் பூக்கள் கொண்டு வந்தபோது அவ்வழியே வந்த பட்டத்து யானை அப்பூக்குடலையைப் பிடித்துச் சிந்த தொண்டர் செய்வதறியாது சிவதா என்று அலறினார். இதனைக் கேள்விப்பட்ட எறிபத்தர் அங்கு வந்து அப்பட்டத்து யானையையும், பாகனையும் தன் மழுவால் கொன்றார். செய்தி அறிந்த மன்னன் யாரோ பகைவர் இச்செயலைச் செய்தனர் என்று கருதி படையுடன் அங்கு வந்தான். நாயனாரைக் கண்டதும் நடந்ததை அறிந்து தவறு யானையுடையது என்பதை உணர்ந்து அந்த யானைக்கு உரிமையுடையவனான தன்னையும் கொல்லவேண்டும் என்று அவன் நாயனாரிடம் வேண்டினான். இப்படிப்பட்ட சிவபக்தனான அரசனுக்குத் துன்பத்தைக் கொடுத்துவிட்டோமே என்று நினைத்து நாயனார் தம்மையே மாய்த்துக்கொள்ள துணிகிறார். அச் சமயத்தில் இறைவன் காட்சி கொடுத்து இறந்தவர்களையெல்லாம் உயிர்ப்பித்து அருளுகிறார்.
முகவரி : அருள்மிகு.பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர் – 639001 கரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : செயல் அலுவலர்
அருள்மிகு. பசுபதீஸ்வரர் கோயில்
கரூர் - 639001
தொலைபேசி : 04324-262010
அலைபேசி : 9994012627

இருப்பிட வரைபடம்


மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க 
அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது 
முழையரி என்னத் தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் 
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார்

    	           - பெரிய புராணம் 557
பாடல் கேளுங்கள்
 மழை வளர்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க